Thursday, 17 January 2013

அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்! (படங்கள்)




அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்!  (படங்கள்)



பொங்கல் பண்டிகையான ஜன.14-ம் தேதி திங்கள்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் நடத்தினர்.

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை,       
பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய  சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாறிவிட்டது. எனவே இதனை அரசு கவனத்தில் ஈர்க்கும் வகையில் ஜன.14-ம் தேதி பொங்கல் தினமான திங்கள்கிழமை துணைவேந்தர் வீடு மற்றும் பதிவாளர் வீடு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தை முன்னிட்டு துணைவேந்தர் பாதுகாப்பு கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்ததால், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் வீடு முன்பு ஏஎஸ்பி எம்.துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட வந்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கிடையாது என தெரிவித்தும், அதை மீறி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

பின்னர் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்ததை அடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வீடுகள் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மிகப்பெரிய பாத்திரங்களை வைத்து தீ முட்டிகஞ்சி காய்ச்சி குடித்தனர். மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

Tuesday, 15 January 2013

Annamalai University alters retirement policy



        Return to frontpage

Annamalai University alters retirement policy

       Following pressure exerted by the Joint Action Council of the teaching and non-teaching staff, Annamalai University, entangled in a financial crisis, has altered the retirement policy for its teaching staff.
Before the crisis, the university was following two different retirement policies for non-teaching and teaching staff.
While the former were relieved from duty in the very same month they attained superannuation, teaching staff who were to retire in the course of the calendar year were allowed to continue in service, with full benefits, till the end of the academic year.
However, the tight financial situation and the insistence of the JAC have made the management to yield grounds and to adopt a uniform retirement policy for both teaching and non-teaching staff. Such a policy shift has brought to abrupt end the career of many senior academics.
Meanwhile, the JAC has proposed to take its agitation a step further by prevailing upon the management to give Pongal bonus, dearness allowance arrears and other common benefits accompanying the salary package.
R. Udaiachandran and S. Mathiyalagan, coordinator and deputy coordinator of the JAC, contended that since the management had agreed to pay the usual salary it was bound to honour its commitment in its entirety.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்




சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகக்கழகத்தில் துணைவேந்தர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்பு தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவை தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வில்லை. இதனால் பொங்கல் போனஸ் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை தினத்தன்று அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
பரபரப்பு
இப்போராட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்க தலைவர் கிள்ளைரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண் டனர். துணைவேந்தர், பதிவாளர் வீடுகள் முன்பு ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் குடிக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்


அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் வீடுகள் முன் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை நடத்தினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை நடத்தினர்.
பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்ப்பிப்புத் தொகை, ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதியழகன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
துணைவேந்தர் பாதுகாப்பு கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்ததால், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் வீடு முன்பு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட வந்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கிடையாது என தெரிவித்தும், அதை மீறி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
பின்னர் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்ததை அடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வீடுகள் முன் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் பாத்திரங்களை வைத்து தீ முட்டி கஞ்சி காய்ச்சி குடித்தனர். மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.