சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகக்கழகத்தில் துணைவேந்தர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்பு தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவை தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வில்லை. இதனால் பொங்கல் போனஸ் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை தினத்தன்று அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
பரபரப்பு
இப்போராட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்க தலைவர் கிள்ளைரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண் டனர். துணைவேந்தர், பதிவாளர் வீடுகள் முன்பு ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் குடிக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment